கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கு மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அவரது மனைவி கற்பிக்கும் பாடசாலையைச் சேர்ந்த 25 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
காலி ஹபரதுவா பகுதியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது மனைவி கோனாபினுவால பாடசாலையில் ஆசிரியராக உள்ளார். அவரது உயிரியல் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போதும் முடிவு கிடைக்கவில்லை. எனினும் அவரது வகுப்பைச் சேர்ந்த 25 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.






