லண்டனில் வசிக்கும் இந்தியர் எடுத்த துணிச்சல் முடிவு… குவியும் பாராட்டுக்கள்!

பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை சார்பில், கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் நிலையில் அதில் இந்தியரான தீபக் பலிவால் தைரியமாக பங்கேற்றுள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிராக, ஆக்ஸ்போர்டு பல்கலை சார்பில், தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அது தற்போது பரிசோதனையில் உள்ளது. மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதித்து பார்க்க அனுமதிக்கப்பட்டது.

அதன்படி நடந்த முதல்கட்ட பரிசோதனையில், லண்டனில் வசிக்கும் தீபக் பலிவால் பங்கேற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இவர், தாமாக முன்வந்து பரிசோதனையில் பங்கேற்றார்.

பரிசோதனையில் உள்ள ஆபத்துகள் குறித்து அவருக்கு ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர். மனைவி மறுத்தபோதும், கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்த பரிசோதனையில் ஈடுபடுவதில், தீபக் உறுதியாக இருந்தார்.

தற்போது பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், அவருடைய மன தைரியத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.