வித்தியாவின் கனவுகளை சிதைத்த இன்றைய நாள்!

வரலாற்றில் பல நாட்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை, அவற்றை நினைவுகூர்வதை யாரும் கசப்பாய் உணர்ந்ததில்லை, ஆனால் சில நாட்கள் கறுப்புதினங்களாக மாறாத வடுவை சுமந்துகொண்டு இருக்கின்றன. அந்த நாட்களை சிந்திக்கவே சற்று தயங்கிவிடும் இந்த மனித மனம்.

அப்படி ஒரு கறுப்பு தினம்தான் இன்று, இலங்கை மாத்திரமின்றி சர்வதேசத்தையும் உலுக்கிய ஒரு கொடூர படுகொலையை நினைவுகூர வேண்டிய நாள் இன்று.

ஒரு எதிர்கால சாதனையாளர், முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு, அந்த குடும்பத்திற்கும் அந்த சமூகத்திற்கும் மீளா துயரினை ஓர் நயவஞ்சகர் கூட்டம் அள்ளிக்கொடுத்ததும் இதேபோன்ற ஒரு நாளில்தான்.

படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

கடந்த இரண்டு வருடங்களாக நீதி கிடைக்காதா என்ற அவல நிலையுடன் வித்தியாவின் நினைவுதினம் அனைவராலும் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நிம்மதி பெருமூச்சுடன் வித்தியாவின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.