தமிழ் கிராமத்தை அழித்த பிள்ளையான்! புலிகளின் முன்னாள் தளபதி வெளியிட்ட திடுக்கிடும் ஆதாரங்கள்

பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில், தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு என்று ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதியை, சிங்கள எல்லைக் கிராமம் ஒன்றின் அபிவிருத்திக்காக பயன்படுத்திய ரகசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தயாமோகன் அம்பலப்படுத்தியுள்ளர்.

அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு கரையோர மக்களின் அபிவிருத்திக்கு என்று உருவாக்கப்பட்ட NECCDP – North East Coastal Community Development Project திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட பெரும் தொகைப் பணத்தை, சிங்கள எல்லைக் கிராமமான சோமாவதி இலிருந்து சேருவிலகிராமம் வரையில் பாரிய வீதியை நிர்மாணிக்கப் பிள்ளையான் பயன்படுத்தியிருந்தார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

காடுகள், ஆறுகள், மலைகள் சார்ந்த பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் பிரமாண்டமான அந்த வீதியை பசில் ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க பிள்ளையான சிங்களவர்களுக்காக அமைத்திருந்ததாக தயாமோகன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் பெருமளவு சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.