காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞன்.. வைராக்கியமாக குழந்தையை வாங்க மறுக்கும் தாய்

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சிதான் சொல்வதெல்லாம் உண்மை. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளினியாக நடத்தியும் வருகிறார். தற்போது இரண்டாம் பாகம் தொடங்கி 540 எபிசோட்-டையும் தாண்டி பல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவரும் மக்களுக்கு தகுந்த தீர்வை அளித்து வருகிறது. சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் இந்நிகழ்ச்சி மூலம் தான் வெளியுலகத்திற்கு தெரிய வருகிறது.

இக்காணொளியில் வரும் இளைஞன் தன்னுடன் வேலை செய்யும் இளம்பெண்ணை காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சாதிமாறி திருமணம் செய்த அவர்களை என்னை அசிங்கபடுத்தியதாக நினைத்து ஏறக மறுத்துள்ளார் இளைஞரின் தாய்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கு பிறந்த குழந்தையை கையில் வாங்க மறுத்தள்ளார். பின் லட்சுமி ராமகிருஷ்ணன் கட்டாயபடுத்தி கையில் பிடியுங்கள் என்று சொல்லியும் வாங்க மறுத்துள்ளார் இளைஞரின் தாய். கடுங்கோபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்ன பின்னரே அவர் வாங்கியுள்ளார். பின் குழந்தை முகத்தை பார்த்து அவர் அழும் காட்சி மனதை உருக்கியது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like