யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 795வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 795வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளதாகயாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 795வாகனங்கள் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தின் தேர்தல் வாகனபிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக 508 வாக்குச் சாவடிகள், மற்றும் தேர்தல்கடமைகளில் ஈடுபட்டுள்ள விசேட பிரிவுகளுக்குமாக 795வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கென யாழ் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு சொந்தமான 145, வஇலஙாகனங்களும் இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் 53, தனியார் மினி பஸ்கள் 120, உள்ளடங்களாக மொத்தம் 795வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன

எதிர்வரும் 3 ம் திகதி திணைக்களங்களிலிருந்து பெறப்படும் வாகனங்கள் அனைத்தும் பொறுப்பேற்கப்பட்டு மீண்டும் 6 திகதி காலை மீள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படள்ளதுபேருந்துகள் அனைத்தும் 3ம் திகதி பொறுப்பேற்கப்பட்டு வாக்களிப்பு தினத்தன்று மாலை மீளஒப்படைக்கப்படவுள்ளது.

தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கென திணைக்களங்களுக்கு சொந்தமான 25 வாகனங்கள் யாழ்மாவட்ட உதவிதேர்தல் திணைக்களத்தினால் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.