விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்து இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா – வெளியான புதிய புகைப்படம்

முள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இப் புகைப்படம் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இப் புகைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடனும் இன்னுமொரு உறுப்பினர் சிவில் உடையுடனும் காணப்படுகின்றனர்.

அவர்கள் இருவரும் மிகவும் பயந்த சுபாவத்துடன் காணப்படுவதனால் இவர்களை இராணுவத்தினர் பிடித்துள்ளனர் என நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையேல் இராணுவச் சிப்பாய் இளநீர் கொடுப்பதை பார்க்கையில் அவர்களாக சரணடைந்திருக்கலாம் எனவும் ஒருபுறம் நினைக்கத் தோன்றுகின்றது.

இவர்கள் இருவரும் தற்போது எங்கே என கேள்வி கிளம்புகின்றது.

பிஸ்கட் கொடுத்துவிட்டு பாலச்சந்திரனைச் சுட்டுக்கொன்றது போல….. பணிஸ் கொடுத்துவிட்டு கேணல் ரமேஸை கொன்றது போல.. தேநீர் கொடுத்துவிட்டு நடேசனைக் கொன்றது போல…. இளநீர் கொடுத்துவிட்டு இவர்களையும் இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா…..

இன்னும் இவ்வாறான படங்கள் வெளிவருமா.. வெளிவரலாம் எனத் தோன்றுகின்றது.

எனினும் இவர்கள் யார்.. இவர்களுக்கு என்ன நடந்தது.. என்ன நடந்திருக்கும்… ஊகிக்க முடிகிறதா மக்களே…..?

Get real time updates directly on you device, subscribe now.

You might also like