யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யுவதியொருவர் குளிக்கும் போது இரகசியமாக ரசித்த ஆசாமி நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யுவதியொருவர் தன் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வளவிற்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, யுவதியின் தாயார் அதை அவதானித்து, ஆசாமியை எட்டிப் பிடித்து கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அயலவர்கள் கூடி ஆசாமியை மடக்கிப் பிடித்தபோது அருகிலுள்ள திடலில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும் அங்கு கூடி, ஆசாமியை புரட்டியெடுத்தனர்.
இந்த தாக்குதலில் ஆசாமி மயக்கமடைந்துள்ளார். பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
40 வயதான பிரதேசவாசியொருவரே இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.