பட்டதாரிகளின் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?

வடக்கு மாகாணப் பட்டதாரிகளில் பூரண ஒத்துழைப்புடன், ஒன்றிணைந்த பட்டதாரிகளால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்த படடதாரிகள் அங்கிருந்து அரச தலைவரது செயலகைத்தைச் சென்றடைந்தனர்.

அங்கு அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது பட்டதாரிகள் மீது பொலிஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதனால் பட்டதாரிகள் கோசங்களை எழும்பி அரச தலைவரைச் சந்திக்க அனுமதி கோரினர்.

இதனையடுத்து அரச தலைவரது செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் இருவரை மட்டும் உள்ளே அழைத்துப் பேச அனுமதி அளித்தனர். அதனையடுத்து பட்டதாரிகள் போராட்டம் ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் நகர்ந்துள்ளனர்.

பட்டதரிகளின் பேச்சுக்குப் பின்னர் தமது சாதகமான பதில் வழங்கப்பட்டால் போராட்டம் நிறைவடையும் என்று பட்டதாரிகள் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like