இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்களை கண்காணிக்க இந்திய புலனாய்வு சேவையான ரோ புலனாய்வு சேவையின் அதிகாரிகள் சிலர் இரகசியமாக இலங்கைக்குள் வந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் நடத்திய சில கூட்டங்களில் இந்தியா இந்த தேர்தல் தொடர்பான பின்னணிகளை கண்காணித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பது மற்றும் சீனாவிடம் இருந்து நிதியுதவிகளை பெற்றுக்கொள்வது காரணமாக இந்தியாவின் ரோ புலனாய்வு சேவை இலங்கையில் தேர்தல்களில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்திய புலனாய்வு சேவை தலையீடுகளை மேற்கொண்டிருந்தது.
இந்திய ரோ புலனாய்வு சேவையின் 10 முகவர்கள், ரோ அணியினருக்கு தகவல்களை வழங்கி வருவதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.