ஜனாதிபதி கோட்டாயவுடன் பயணித்த பாதுகாப்பு வாகனங்கள் விபத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு பயணித்த வாகனங்கள் இரண்டு மஹரகம நகர மத்தியில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மஹகரம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக்கும் போது இரவு 9.20 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு பின்னால் வந்த வாகன வரிசைகள், ஹய்லெவல் வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென திருப்பும் போது, ஏற்படவிருந்த விபத்தை தடுப்பதற்காக ஜனாதிபதி பாதுகாப்பு வாகனத்தின் பிரேக் அழுத்தப்பட்டுள்ளது. இதனால் பின்னால் வந்த வாகனம் முன்னால் பயணித்த வாகனத்துடன் மோதியுள்ளது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், ஜீப் வண்டிகள் இரண்டும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.