கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,730 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி,
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 678 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 111 பேர் நோய் சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
11 பேர் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 2,041 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, பெப்ரவரி 18 முதல் ஜூலை 19 வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மொத்தம் 139,591 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.