மைத்திரியின் திடீர் அறிவிப்பு! விழி பிதுங்கும் பலர்?

அரச சேவை­யி­லும் ஏனைய சகல துறை­க­ளி­லும் காணப்­ப­டும் இலஞ்­சம், ஊழல், மோசடி என்­ப­வற்­றைத் தடுப்­ப­தற்­கும், அவற்றை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கும் பார­பட்­ச­மின்றி, எவ­ருக்­கும் சலுகை அளிக்­காது சட்­டத்தை நடைமுறைப் ­டுத்­து­மா­று அதி­கா­ரி­களை அர­ச­த­லை­வர் பணித்­துள்­ளார்.

பொலன்­ன­றுவை றோயல் கல்­லூ­ரி­யில் நேற்று இடம்­பெற்ற பன்­னாட்டு குடும்ப நல சேவை­கள் தினக் கொண்­டாட்ட நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே மைத்­திரி ­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார் என்று அரச தலை­வர் ஊட­கப் பிரிவு அனுப்­பிய செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சி­யல்­வா­தி­கள் அதி­கா­ரி­கள் கவ­னம்

இலஞ்­சம் மற்­றும் மோசடி என்­ப­வற்­றுற்கு எதி­ராக எது­வித பேதங்­கள் இன்­றி­யும் எந்­த­வொரு நப­ருக்­கும் சலுகை அளிக்­கப்­ப­டா­ம­லும் சட்­டத்தை உரி­ய­மு­றை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­த­வும்.

பொது­மக்­க­ளின் கோபத்­துக்­கும் வெறுப்­புக்­கும் உள்­ளா­கும் வகை­யில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் அர­சி­யல்­வா­தி­க­ளும் அரச அதி­கா­ரி­க­ளும் செயற்­ப­டக் கூடாது. சிறந்­த­வொரு சமூ­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக அரச சேவை­யி­லி­ருந்து இலஞ்­சம் முற்­றாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்­டும்.

நான் அமைச்­ச­ரா­கச் செயற்­பட்ட காலத்­தி­லும் அர­ச­த­லை­வ­ரா­கப் பதவி வகித்­து­வ­ரும் மூன்று வருட காலத்­தி­லும் இலஞ்­சம், ஊழல், மோசடி, திருட்டு, வீண்­வி­ர­யம் மற்­றும் அரச சொத்­துக்­க­ளின் முறை­யற்ற பாவனை என்­ப­வற்­றைத் தடுப்­ப­தற்­காக எது­வித வேறு­பா­டு­க­ளும் இன்றி சகல நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கி­றேன்.

மத்­திய வங்கி தொடர்­பில் நிய­மிக்­கப்­பட்ட அர­ச­த­லை­வர் ஆணைக்­கு­ழு­வின் செயற்­பா­டு­களை உரி­ய­வாறு முன்­னோக்கி கொண்­டு­செல்ல நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தைப் போன்று சிறி லங்­கன் விமான சேவை­யில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­கள் தொடர்­பில் உண்­மை­யைக் கண்­ட­றி­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­ச­த­லை­வர் ஆணைக்­கு­ழு­வும் எதிர்­கா­லத்­தில் மிக முக்­கி­ய­மான தக­வல்­களை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்­தும்.

பன்­னாட்டு ரீதி­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள எமது சுகா­தார சேவை­யி­லி­ருந்து இலஞ்­சம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளமை மகிழ்ச்சி அளிக்­கி­றது.

எமது நாட்­டின் இல­வச சுகா­தார சேவையை மேலும் பலப்­ப­டுத்தி முன்­னோக்­கிக் கொண்டு செல்­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளும் அர்ப்­ப­ணிப்­பு­டன் மேற்­கொள்­ளப்­ப­டும் என்று அரச தலை­வர் மேலும் தெரி­வித்­தார்.

நாட்­டின் சுகா­தார துறை­யின் முன்­னேற்­றத்­துக்­காக மேற்­கொள்­ளும் சிறப்­புச் சேவை­யைப் பாராட்டி சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன மற்­றும் குடும்ப நல சேவை­கள் சங்­கத்­தின் தலை­வர் தேவிகா கொடி­து­வக்கு உள்­ளிட்­டோ­ருக்கு அர­ச­த­லை­வர் நினை­வுப் பரி­சில்­கள் வழங்­கி­னார்.