தமிழ் மன்னனின் கொடியை போன்று இலங்கையின் தேசிய கொடியை மாற்றுமாறு வலியுறுத்தல்

இலங்கையின் தேசிய கொடியை மாற்றியமைக்க வேண்டுமென வழக்கறிஞர் நாகாநந்த கொடித்துவக்கு வலியுறுத்தினார்.

இந்த நாட்டு மக்களை பேதங்கள் மூலம் பிரிப்பதற்காகவே தற்போதைய தேசிய கொடி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையின் தேசிய கொடியில் காணப்படும் சிவப்பு, பச்சை நிறங்கள் ஜாதிகளை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல நான்கு அரச இலைகளும் பௌத்த மதத்தை குறிப்பிடுகின்றது.

அவை அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். சிங்கமும் அதன் கையில் உள்ள வாளும் வீரத்தை குறிப்பிடுகின்றது. இது இராஜசிங்க மன்னனின் கொடியாகும்.

இராஜசிங்க மன்னன் ஒரு தமிழ் மன்னன். அவர் சிங்கக்கொடியை மாத்திரமே தேசிய சின்னமாக எடுத்து கொண்டார் என குறிப்பிட்டார்.