நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அதிகமான வெப்பநிலை நிலவுவதால் நாளொன்றுக்கு 2 லீற்றர் நீர் அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபுணர் ரேனுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நீர் அதிகமாக அருந்துவது கட்டாயமாகும். அத்துடன் நீர் அருந்தும் போது தேசிக்காய் அல்லது வெள்ளரிக்காய்களை நீரில் கலந்து பருகினாலும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பமான காலநிலையின் போது அதிகமாக நீர் பருகவில்லை என்றால் தலைவி, தலைசுற்று, உடல் வலி, நீர்ப்போக்கு போன்ற நோய்கள் தாக்க கூடும். எனவே இது தொடர்பில் அவதானமாக இருந்து அதிகமாக நீர் பருக வேண்டும். அத்துடன் இளநீர் போன்றவைகளை அதிக பருகலாம்.

அதேபோன்று சிறு பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லீற்றர் நீர் வழங்குங்கள். இந்த நாட்களில் அடிக்கடி குளிப்பதும் நல்லது.

அத்துடன் அதிக வெப்பமான காலநிலையின் போது பயணங்களில் ஈடுபட வேண்டாம். கூடியளவு குடைகளை பயன்படுத்த வேண்டும். தொப்பி மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளை பயன்படுத்துங்கள். இந்த வெப்பம் உடலுக்கு ஏற்றதல்ல என்பதனால் சிந்தித்து செயற்படுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.