குரு தோஷம் இருந்தால் இந்த பழத்தை சாப்பிட கூடாது! சனியின் கோர ஆட்டத்தில் இருந்து தப்பிக்க இது ஒன்றுதான் வழி?

வாழ்க்கையில் வரும் பல பிரச்சினைகள், மனக் கவலைகள் கிரக அமைப்பு மோசமாக அமைந்திருப்பதால் ஏற்படக் கூடும்.

ஜோதிட ரீதியாக எந்த கிரகத்தால் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன, அதற்குறிய நிவாரணம் அளிக்கக் கூடிய பரிகாரம் முறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்…

சூரிய பலமற்ற நிலை
ஒரு நபருக்கு ஜாதகத்தில் சூரிய பலமற்ற அல்லது சாதமற்ற இடத்தில் இருந்தால், சூரியனை தினமும் வணங்குதலும், சூரிய நமஸ்காரம் செய்தலும் வேண்டும். பூஜைக்குரிய நீரில் சிறிது குங்குமப்பூ கலக்க மறக்காதீர்கள். சூரியனுக்கு உரிய காயத்ரி மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். இது சூரியனால் ஏற்படக்கூடிய கெடுபலன்களிலிருண்டு தப்பிக்க வழி கொடுக்கும்.

சந்திரன் நற்பலன் பெற
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் குறைபாடு இருந்தால், நீங்கள் சிவனை வணங்க வேண்டும். வெள்ளி பாத்திரத்தில் தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வதும்,

ஸ்ரீ சந்திர பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர: ப்ரசோதயாத்
என்ற சந்திரனுக்குரிய மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

செவ்வாய் கிரகம் தரும் பிரச்னைகள்
ஜோதிடத்தின் படி, உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சாதகமற்றதாக இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு தான, தர்மங்கள் செய்யவும். அதோடு, செவ்வாய்க்கிழமைகளில் ஏழைகளுக்கு அடிப்படைத் தேவையான பொருட்களை வழங்குதல், இனிப்புகளை வழங்கலாம். செவ்வாய்க்கிழமை சுந்தர கண்டத்தைப் படிப்பதால் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் நீங்கும்.

புதன் கிரக தோஷங்கள் நீங்க
உங்கள் ஜாதகத்தில் புதன் குறைபாடு இருப்பின்,, உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். இதை சரிசெய்ய, செப்பு தாயத்துக்கள் அல்லது காப்பு கைகளில் அணிய வேண்டும். விநாயகரை வணங்குவதன் மூலமும், பசுவுக்குக் கீரை கொடுப்பதன் மூலம் புதன் பகவானால் ஏற்படக்கூடிய குறைபாடுகள், பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு புதனின் அருள் கிடைக்கும்.

குரு தோஷம் இருந்தால்
ஜோதிடத்தின் படி, குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் நவகிரகங்களில் குருவை வணங்க வேண்டும். மஞ்சள் நிற பொருட்களைத் தானமாக வழங்குதலும், குரு பகவானுக்கு மஞ்சள் நிற துணியை சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் வாழைப்பழத்தையும் சாப்பிட வேண்டாம்.

சுக்கிர பலன்
சுக போகங்களை அளிக்கக் கூடிய சுக்கிர பகவான் ஜாதகத்தில் பலமற்று அல்லது சாதகமற்ற நிலையில் இருந்தால் வெள்ளை நிற பொருட்களை தானமாக வழங்குதல் நல்லது. குறிப்பாக அரிசி தானம் செய்வது மிகவும் உத்தமம். தினமும் லட்சுமி தேவியை வணங்குதலும், ‘ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம’ என்ற மந்திரத்தை சொல்லலாம். இது சுக்கிர பகவானால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை நீக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறலாம்.

ஜாதகத்தில் சனி பாதிப்பு இருந்தால்
ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் சனி சாதகமற்ற இடத்தில் இருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் இழப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என எல்லாவற்றிலும் சிரமம் ஏற்படும். அப்படிப்பட்ட மிக சிரமமான நிகழ்வுகள் நடந்தால் சனி பலம் இன்றி அல்லது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்பதை உணரலாம். சனிக்கிழமைகளில் கருப்பு மற்றும் நீல உடை அணிய வேண்டாம்.

சனிக்கிழமைகளில் அரச மரத்தின் கீழ் விளக்குகளை ஏற்றி வழிபடவும். மேலும் சனி கோவிலில் சனியின் கால்களைப் பார்த்து விளக்கை ஏற்றி வைக்கவும். அனுமன் சாலிசாவையும் பாடி வர சனி பகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் நீங்கும்.