யாழ்.சாவகச்சேரி கல்வயல் கிராமசேவகர் அலுவலகம் உள்ள வீட்டின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கம்பிகள், தடிகள், வாள்கள் சகிதம் வந்த கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலில் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டிருப்பதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தனிப்பட்ட முரண்பாட்டினாலேயே நடத்தப்பட்டிருப்பதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கெருடாவில் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.






