வனிதா பீட்டர் பால் என்பவரை முறையாக விவகாரத்து செய்யாமலேயே மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்களின் திருமணம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனால், இதற்கு ஏற்கனவே கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி, லிப்ரா புரோடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், நாஞ்சில் விஜயன் என பலர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
ஆனால், அதற்கு எல்லாம் அஞ்சாத வனிதா அனைவரையும் தகாத வார்த்தைகளில் வசைப்பாடினார்.
இந்நிலையில், வனிதா பதிவு ஒன்றில் தஞ்சாவூர் காரங்க எல்லாரும் ரெண்டு பொண்டாட்டிக்காரங்க தான் என கூறியுள்ளார். வனிதாவின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனால், பாஜக சார்பில் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் மனிதனை உடனடியாகக் கைதுசெய்யுமாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், என் அம்மாவும் தஞ்சையில் இருந்து வந்தவர், ஆனால் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்.
நான் தவறாக பேசியிருந்தாலோ அல்லது செய்திருந்தாலோ அதற்கு மன்னிப்பு கேட்பதை நான் ஒருபோதும் தவறாக உணர மாட்டேன். நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம், ஆனால் நான் அவமதிக்கவில்லை.
தஞ்சையில் இருந்து வந்த எனது சக சகோதர சகோதரிகளே… தயவுசெய்து என் கோபத்தையும் குரலையும் இன்னொரு பிரச்சினையில் உங்களை அவமதித்ததாக தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
உங்கள் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய எதையும் நான் தற்செயலாக செய்திருந்தால் மிகவும் வருந்துகிறேன். மன்னிச்சுக்கோங்க தம்பி தங்கச்சிகளே என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் தன்னை விட வயதில் பெரியவர்கள் குறித்து அவர் எதையும் கூறவில்லை. இதனால், பெரியோர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.