மனைவியை கொடூரமாக கொலை செய்த சித்திரக் கலைஞர்!!

இலங்கையில் திருமணமாகி ஐந்து மாதங்களில் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வேயங்கொடை, கட்டுவஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சுதார ரஞ்சித் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபல சித்திர கலைஞரான சுதார ரஞ்சித் கடந்த ஜனவரி மாதம் 27 வயதான சத்ராபேடி சுமுது ஜயரத்ன என்பவரை திருமணம் செய்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திருமணம் நடந்த நாளில் இருந்து இந்து குறித்த இருவருக்கும் இடையில் மோதல் நிலை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது கோபமடைந்த கணவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணத்தில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

படுகாயமடைந்த மனைவி உயிரிழந்துள்ள நிலையில், சந்தேக நபர் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். எனினும், கிராம மக்கள் இணைந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.சித்திரம் வரையும் திறமையின் ஊடாக, சமூக வலைத்தளங்களில் சுதார ரஞ்சித் அதிகம் பிரபலமடைந்த ஒருவராக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like