சுவிற்சர்லாந்தில் காவல் துறையில் இடம்பிடித்த தமிழர்! குவியும் வாழ்த்துக்கள்

சுவிற்சர்லாந்தில் மாநில (பாசல்) காவல் துறையில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியினை தோற்றுவித்துள்ளது.

Chandran Subramaniam என்பவரே சுவிற்சர்லாந்தில் காவல்துறையில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார்.

ஒரு தமிழன் சுவிசின் காவல் துறையில் அடையாளப்படுத்தப்படும் வகையில் உயர்ந்து நிற்கின்றமை சாதாரணமான ஒன்றல்ல.

பல இன்னல்களிற்கு மத்தியில் நம் தாயகத்தை விட்டுவெளியேறி பலநாடுகளில், பல தேசங்களில் , நாம் தஞ்சம் அடைந்துள்ளோம். எனினும் புலம்பெயர் தேசத்திலும் நம் இளையவர்கள் பல துறைகளிலும் தமது காலடி தடங்களை பதித்து தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் சுவிற்சர்லாந்தில் பாசல் காவல் துறையில் நம்மவர் ஒருவர் தடம்பதித்துள்ளமையானது புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் பெருமைப்படவேண்டிய விடயம்.

இந்நிலையில் Chandran Subramaniam அவர்களிற்கு அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்ற அதேவேளை, தாம் பெருமிதமாய் உள்ளதாகவும் புலம்பெயர் தமிழர்கள் பலரும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like