பிரிட்டனில் இருந்து பிரான்ஸ் செல்லும் தமிழர்களே உங்கள் கவனத்திற்கு… ஜாக்கிரதை!

நம் புலம்பெயர் தமிழர்கள் பலரும் பிரிட்டனில் இருந்து பிரான்ஸ் மற்றும் அதனூடாக ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு காரில் செல்வது வழக்கம்.

அது போல பிரிட்டனில் இருந்து காரில் ஒரு குடும்பம் பிரான்ஸ் சென்றுள்ளது. அவர்கள் மீண்டும் பிரிட்டனுக்கு காரில் வந்தபோது ஒரு இடத்தில் இளைப்பாறியுள்ளார்கள்.

இந்நிலையில் காரில் மேல் புறத்தில் பொருட்களை வைக்க பொருத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென 2 பேர் இறங்கியதும். அவர்களை பார்த்து ஆடிப்போய்விட்டார்கள்.

ஏனெனில் குறித்த இருவரும் , லண்டன் வந்து விட்டது என்று நினைத்து காரில் இருந்து இறங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் நின்றது பிரான்சில் தான்.

இதுபோல பல ஆயிரம் அகதிகள் சட்டவிரோதமாக நாளுக்கு நாள் பிரிட்டன் வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் என்ன செய்யவும் தயங்க மாட்டார்கள்.

குறிப்பாக இவ்வாறானவர்கள் பிரிட்டன் கார் நம்பர் பிளேட்டை பார்த்தால் போதும் டிக்கியில் கூட ஏறி ஒளிந்து கொள்கிறார்களாம்.

இவர்கள் உங்கள் காரில் ஏறி ஒளிந்துகொள்வது தெரியாமல் நீங்கள் காரை பிரிட்டன் நோக்கி ஓடி வந்து பிரிட்டன் இமிகிரேஷனிடம் மாட்டிக் கொண்டால் உங்கள் மீது தான் ஆள் கடத்தல் வழக்கு போடுவார்கள். எனவே தமிழர்களே ஜாக்கிரதை இப்படியானவர்களிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள் .