தாய் வீட்டில் கதறியழுத புதுப்பெண்… நடு இரவில் பெட்ரூமில் பிணமாக கிடந்த சோகம்

திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா(24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது.

நிரேஷ் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மேட்ரிமோனி மூலமாகவே இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான இரண்டு மாதம் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி பின்பு சிறிது சிறிது சண்டை ஏற்பட்டு, இறுதியில் தாய் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையறிந்து, பொலிசார் பிரியங்காவின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், வரதட்சணை பிரச்சனை என்றும், கல்யாணத்துக்கு 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாக, கூறிவிட்டு 40 சவரன் மட்டுமே போட்டுள்ளதாகவும், இதனால் இருவீட்டாருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பின்பு நிரேஷ் வீட்டிலிருந்து அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால் கதறியழுது கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பொலிசார் கணவர் வீட்டாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like