கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுட்டெரிக்கும் கங்கில் கருகிய பூசாரி (வீடியோ)

இந்தியாவில் பூசாரி ஒருவர் சுட்டெரிக்கும் கங்கில் விழுந்ததால், அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் Ramanagara மாவட்டத்தில் உள்ள Sri Revanasiddeshwara கோவிலில் சமீபத்தில் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

கடவுளின் அருளைப் பெறுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். கோவில் திருவிழாவின் ஒரு அங்கமாக சுட்டெரிக்கும் கங்கில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் நடந்து வருவர்.

சுமார் 15-அடிக்கு போடப்பட்டிருந்த இந்த கங்கில் பூசாரியான Vijay Kumar(35) என்பவர் கையில் வாள் ஒன்றை வைத்துக் கொண்டு, அதிவேகமாக அந்த கங்கில் ஓடி வந்துள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக கங்கின் மேலே விழுந்ததால், அவரது கை மற்றும் கால்கள் கருகின. இதனால் அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள St.John’s Medical College மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் 60 சதவீதத்திற்கும் மேலாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வர வேண்டு எனவும் கூறியுள்ளனர்.

பூசாரி கங்கில் ஓடி வந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பக்தர்கள் அவர் கீழே விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.