ஐந்து மாதங்களில் ஏழாயிரம் மாணவிகள் கர்ப்பம்! வெளியான பகீர் தகவல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கடந்த ஐந்து மாதங்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பாடசாலைகளையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது.

இதன்பின்னர் 10 வயது தொடக்கம் 14 வயது வரையான மாணவிகள் மற்றும் சிறுமிகளே இவ்வாறு கருத்தரித்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்

இது குறித்து கல்வி தொடர்பான சிவில் அமைப்பின் இயக்குநர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில்,

கொரோனா தொற்றுநோய் நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மிகமோசமாக பாதித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கென்யாவில் கொரோனா ஊரடங்கின் போது மூன்று மாதங்களில் 152,000 கென்ய சிறுமிகள் கர்ப்பமாகி இருந்தனர். இதனால் அங்கு 150,000 இற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.