கத்தியை பரிசளித்த காதலி.. கழுத்தை அறுத்து துடிக்க வைத்த காதலன்: அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுத்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர். வேலூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் இவரும் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியைச் சேர்ந்த சுபீத்தரா தேவி என்பவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

காதலித்து கொண்டிருக்கும் போதே ஷபீர் என்னை எப்போதும் திருமணம் செய்து கொள்வாய் என்று சுபீத்தரா தேவியிடம் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார்.

ஆனால் இவர்களின் காதலுக்கு சுபீத்தரா தேவியின் வீட்டார் சம்மதிக்காத காரணத்தினால், சுபீத்தரா இந்த திருமணம் நடக்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பெற்றோர் கேட்ட போது, நான் ஷபீரைக் காதலிக்கவில்லை. காதலிக்காவிட்டால் என்னைக் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டினான். அதன் காரணமாகவே அவனிடம் காதலிப்பதாகப் பேசி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சுபீத்தராவின் வீட்டார் காவல்நிலையத்தில் ஷபீர் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால் பொலிசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து ஷபீர் சில நாட்கள் சுபீத்தராவிடம் பேசாமல் இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு போன் செய்து உன்னிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை ஏற்று இருவரும் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சந்தித்துப் பேசிக்கொண்டு, அருகில் உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அப்போதும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுபீத்தராவை, ஷபீர் வற்புறுத்தியுள்ளார்.

அப்போது சுபீத்தர மதத்தை காட்டி திருமணம் செய்ய மறுத்ததால், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் துடித்து விழுந்த அவரை அதன் பின் ஷபீரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

பொலிசாரிடமும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்ட பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, நான்தான் சுபீத்தரா கழுத்தை அறுத்தேன்.

அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றதால், கழுத்தை அறுத்தேன் என்று கூறியதால் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுபீத்தராவுக்கு கத்திகள் மிகவும் பிடிக்கும் என்பதால் காதலித்து கொண்டிருந்த போது ஷபீருக்கு பிறந்த நாள் பரிசாக சிறிய ரக கத்தி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்,

அந்த கத்தியை வைத்தே தற்போது சுபீத்தராவின் கழுத்தை அறுத்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like