லண்டன், இலங்கை, கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் ஒன்றிணைந்து செய்த பாரிய மோசடி அம்பலம்!

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று சகோதரிகள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த பராசக்தி (36) லண்டனைச் சேர்ந்த செல்வி (36) கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (27) ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைகளின் பின் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் இவர்களது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை தரக்கோரி, இலங்கையைச் சேர்ந்த பராசக்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிசார் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பராசக்தி மீது, கோவை, சென்னை, புதுச்சேரியில் பல நகைபறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்தால், இலங்கைக்கு தப்பி சென்று விடுவார் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கில் அவரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் அவர் தொடர்ந்தும் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மூன்று சகோதரிகளும் திருமணத்துக்கு முன்னரே திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எனினும் திருமணத்துக்கு பின்னரும் அதை விடவில்லை.

அதன்படி தமிழகத்தில் எங்கெல்லாம் கோவில்களில் திருவிழா நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு அங்கு வந்துவிடுவார்கள்.

பின்னர் திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து நகைகளை திருடுவார்கள்.

இதன் பின்னர் நகைகளை விற்று அதில் வரும் பணத்தை பங்கிட்டுக் கொள்வார்கள்.

அப்படி கடந்த கடந்த மார்ச், 4ம் திகதி கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது பராசக்தி, செல்வி, ஸ்ரீமதி ஆகியோர் விமானத்தில் குறித்த இடத்திற்கு வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட போதே பொலிஸாரிடம் வசமாக சிக்கினார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like