மணமேடையில் வைத்தே நின்றுபோன மணமகனின் இறுதி மூச்சு: அதிர்ச்சி சம்பவம்

உ்த்திரபிரதேச மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லகிம்பூர்கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் மண மேடையில் மணமகன் சுனில்வர்மா மணக்கோலத்தில் இருந்தார்.

அவரது அருகே சுனில் வர்மா-வின் நண்பர் ராம் சந்திரா நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருமண வைபவங்கள் நடந்துகொண்டிருக்கும் போது மணமகனை நோக்கி இரண்டு தடவை சுட்டுள்ளார் ராம் சந்திரா.

முதல் குண்டுக்கு தப்பிய மணமகன் சுனில் வர்மா, இரண்டாவது குண்டுக்கு மேடையிலேயே பலியாகி சாய்ந்து விழுந்தார்.

இதனையடுத்து ராம் சந்திரா தப்பி ஓடியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ”பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை செய்யப்பட்டதா ? என ராம்சந்திராவிடம் விசாரணை நடத்திய பின்னர் தான தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like