கடத்தியவரையே மனைவியாக்கிய பிள்ளையான் குழு உறுப்பினர்!! வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் 30ம் திகதிகளில் மட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதியில் பயணம்செய்த தமிழர் புணர்வாழ்வுக் கழக ஊழியர்கள் 22 பேர் பிள்ளையான் – கருணா குழு என்று அழைக்கப்பட்ட ரீ.எம்.வி.பியினரால் வெலிங்கந்தை பகுதியில் கடத்தபட்டு, அதில் 13 பேர் விடுக்கப்பட்டு, மீதி 8 ஊழியர்கள் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட விடயம் சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கருணா-பிள்ளையான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த மனித உரிமை மீறல் சம்பவம் சர்வதேச மனித உரிமை அழைப்புகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது.

அவ்வாறு கருணா-பிள்ளையான் குழுவினரால் கடத்தபட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களுள் ஒரு பெண்ணை, ரி.எம்.வீ.பி. அமைப்பின் அரசியல்துறைப் பொருப்பாளரான பிரதீப் மாஸ்டர் திருமணம் முடித்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாழுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய முன்னணி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like