ஸ்ரீலங்கா அரசியலில் திடீர் திருப்பம்!

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த கோரிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரிடம் இருந்து சிறந்த பதில் கிடைத்துள்ளது. கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரதேசவுக்கு வழங்கும் கௌரவமாகவும் கருதி கட்சியில் இருந்து சஜித்தை நீக்குவதனை தாமதப்பபடுத்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தீர்மானித்துள்ளார்.

எப்படியிருப்பினும் லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, ரஞ்ஜித் மத்துமபண்டார, கபீர் ஹஷும் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சஜித் பிரேமதாஸ தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்படவிருந்த நிலையில், அந்த தீர்மானத்தை தாமதப்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவம் தீர்மானித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் பொது தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 115 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் – சஜித்திற்கு இடையிலான முறுகல் தீவிரம் அடைந்த நிலையில் இரு வேறு குழுக்களாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சஜித் விடுத்துள்ள கோரிக்கையின் பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சமகால பொதுத் தேர்தல் களம் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத முடிவுகளே கிட்டும் என பல புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரணிலுடன் மீண்டும் இணைந்து செயற்படும் வகையிலேயே சஜித் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.