அடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் 10ஆம் நாளான இன்று மாலை மஞ்சத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

வள்ளி, தெய்வாணை சமேதராய் முத்துக்குமார சுவாமி மாலை 5 மணிக்கு மஞ்சத்தில் ஆரோகணித்தார். எனினும் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் மாலை 5.30 மணிக்கு மஞ்சம் இருப்பிடத்தை வந்தடைந்தது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் கோவிட் -19 நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இவ்வாறு முருகப்பெருமான் மஞ்சத்தில் விரைவாக வீதியுலா வந்தார்.

வழமை போன்று கற்பூர பந்தங்கள் அலங்கரிக்க, ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ முத்துக்குமார சுவாமி மஞ்சத்தில் வீதியுலா வந்தார்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like