பிரபல இயக்குநர் காலமானார்

இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தனது 99 ஆவது வயதில்  நேற்று (29) காலமாகியுள்ளார்.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி தெஹிவலயில் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராக தனது தனது வாழ்வைத் தொடங்கினார்.

பின்னர் சினிமா துறைக்குள் நுழைந்தார். 1956 இல் இவரது முதல் படமான ரேகாவ (விதியின் வரிகள்) வெளிவந்தது.

2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது.

1956 இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வுக்கு அடுத்து, 1960 இல் சந்தேசய (செய்தி)வும், 1964 இல் கம்பெரலிய (கிராமப் பிறழ்வு)வும்,1968 இல் கொளுகதவத்த (ஊமை இதயம்) வும், 1972 இல் தாசநிசா (கண்களின் காரணத்தால்) வும், 1975 இல் The God King உம், 1983 இல் யுகாந்தய (யுகத்தின் முடிவில்)வும், இறுதியாக 2001 இல் வேகந்தவளுவவும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like