நாடாளுமன்ற தேர்தல் – அநுராதபுரம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அநுராதபுரம் தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, அநுராதபுரம் – அநுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,075
ஐக்கிய மக்கள் சக்தி – 17,128
தேசிய மக்கள் சக்தி – 3,074
ஐக்கிய தேசியக் கட்சி – 915
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 103,439
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 80,015
செல்லுபடியான வாக்குகள் – 74,692
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,323