யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு வாக்கு விபரம் அறிவிப்பு

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு வாக்கு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.டி.பியின் சார்பில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்னர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய, சி.சிறிதரன் 35,884 வாக்குகளையும், எம்.ஏ.சுமந்திரன் 27,834 வாக்களையும், த.சித்தார்த்தன் 23,840 வாக்குகளையும், சசிகலா 23,098 வாக்குகளையும், மாவை சேனாதிராசா 20,292 வாக்குகளையும், ஈ.சரவணபவன் 20,358 வாக்குகளையும், பா.கஜதீபன் 19,058 வாக்குகளையும், இ.ஆனல்ட் 15,386 வாக்குகளையும், கு.சுரேந்திரன் 10,917 வாக்குகளையும், வே.தவேந்திரன் 5,952 வாக்குகளையும் பெற்றனர்.

மேலும், அங்கஜன் இராமநாதன் 36,356 வாக்குகளையும், டக்ளஸ் தேவானந்தா 32,146 வாக்குகளையும், கஜேந்திரகுமார் 31,658 வாக்குகளையும், க.வி.விக்னேஸ்வரன் 21,554 வாக்குகளை பெற்றனர்.