படு தோல்வியின் பின் அவசரமாக கூடியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி

நடைபெற்று முடிந்த நாடாளுமனறத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்திருந்தது.

இந்த தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகவே 249,435 வாக்குகளையே பெற்று ஒரே ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வி தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் கூடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியை மறுசீரமைக்கவும், புதிய வீரியத்துடன் அதை முன்னெடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.