சுரேன் ராகவனிற்கு கிடைத்தது அதிஸ்ரம்! வெளியானது தகவல்

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், அக்கட்சியினால் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

குறித்த பட்டியலில், கலாநிதி ஜீ.எல்.பீரிஸ், சாகர காரியவசம், அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, மஞ்சுள திஸாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், கெவிந்து குமாரதுங்க, மொஹமட் முசாமில், ராசிரியர் திஸ்ஸ விதாரன, பொறியியலாளர் யாமினி குணவர்தன, கலாநிதி சுரேந்திர ராகவன், டிரான் அல்விஸ், வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல, ஜயந்த கெடுகொட, மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த வேட்பாளர்கள் 17 பேரினதும் பெயர் பட்டியல் இன்று தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like