கடும் அதிருப்தியில் நாட்டு மக்கள்! 70 உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், நவீன் திஸாநாயக்க, வஜிர அபேவர்தன, தயா கமகே, ருவன் விஜேவர்தன, அர்ஜுன ரணதுங்க, அஜித் மான்னப்பெரும, ஹிருணிக்கா பிரேமசந்திர, சுஜீவ சேனசிங்க, அஜித் பீ பெரேரா, பாலித தெவரபெரும, ஏ.எச்.எம்.பௌசி, சதுர சேனாரத்ன, விஜித் விஜேமுனி, எட்வெட் குணசேகர, விஜேபால ஹெட்டிஆராச்சி, பியசேன கமகே, பந்துலால் பண்டாரிகொட, பாலித ரங்கே பண்டார, லக்ஷ்மன் விஜேமான்ன மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகிய ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர்களே இவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.

அத்துடன் கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேருக்கும் அதிகமானோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

திலங்க சுமதிபால, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, டீ.பீ.ஏக்கநாயக்க, எஸ்.பீ.நாவின்ன, தாரானாத் பஸ்நாயக்க, லக்ஷ்மன் வசந்தர பெரேரா, இந்திக்க பண்டாரநாயக்க, நிரோஷன் பிரேமரத்ன மற்றும் துலிப்ப விஜேசேகர ஆகியோர் கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த போதும் இம்முறை தோல்வி அடைந்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் ஹந்துன்நெத்தி, வைத்தியர் நலிந்த ஜயசிஸ்ஸ மற்றும் நிஹால் கல்ப்பத்தி ஆகிய முன்னாள் உறுப்பினர்கள் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா மற்றும் மற்றும் பீ.சரவணபவன், எஸ்.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீகந்தராசா ஆகியோரே இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like