உங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கனுமா! உங்க ராசிய சொல்லுங்க

ராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும் என கணித்து கூறப்படும். அதில் இந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள் ராசிக்கு காதல், இல்லறம், நட்பு போன்றவை எப்படி அமையும், சமூக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்.

மேஷம் :இந்த வருடம் மேஷ ராசிக்காரர்கள் அவர்களுடைய துணையை கண்டறிவது சற்று கடினம் தான். நீங்கள் ஒரு உறவில் இணைவதற்கான வாய்ப்பு குறைவு தான். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் இல்லறத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம். மன அழுத்தம் உண்டாகலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருங்கள், இது தான் உங்களுக்கான ஒரே வழி!

ரிஷபம் :

ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த வருடம் ரொமாண்டிக்கான வருடமாக அமையலாம். காதல் திருமணம் போன்றவை நன்றாக அமையும். லிவின் ரிலேஷன்ஷிப்-க்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மிதுனம் :
உங்கள் ராசிக்கு உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது போல காதல் வாழ்க்கை அமையும். உங்களுக்கு லக் என்றும் கூடவே இருக்கும். இந்த வருடம் நீங்கள் சமூகத்தில் இணைந்து செயல்படும் வகையில் அமையும்

கடகம் :
ஈர்ப்பான குணாதிசயங்கள் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக அமையலாம். திருமணம் ஆனவர்கள் வாழ்க்கையும் முன்பு இல்லாதது போல புரிதல் காணப்பட்டு சிறக்கும்.

சிம்மம் :
இரண்டாம் எண்ணம் ஏதும் இல்லாமல் சிம்ம ராசிக்காரர்கள் காதலில் விழுவார்கள். இல்லற வாழ்க்கையும் புன்னைகை தழுவி காணப்படும். எதையும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.

கன்னி :
நீங்களாகவே உங்களது மனநிலையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றிருந்தால் இவ்வருடம் உங்களுக்கான காதல் துணையை நீங்கள் காண முடியும். வினோதமான, ஆன்மீக நம்பிக்கை உடைய நபர்களுடன் காதல் வயப்படலாம்.

துலாம் :
இந்த வருடம் நீங்கள் சற்று குழப்பமாகவே இருப்பீர்கள். சற்று விட்டுகொடுத்து போவது நல்லது. ரொமான்ஸ் மற்றும் புரிதலில் கவனம் செலுத்தலாம்.

விருச்சிகம் :
இந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை ஏகபோகமாக அமையலாம். நட்பு, காதல், இல்லறம் என அனைத்தும் நன்றாகவே அமையும். சில நேரத்தில் நட்பா? காதலா என்ற நிலையும் ஏற்படும். சில குறுகிய கால உறவுகள் அமையவும் வாய்ப்புகள் உண்டு. எதற்கும் இந்த வருடமே ஒரு உறவில் நிலைத்து இணைந்துவிடுவது நல்லது.

தனுசு :
எதிர் பாலின நபர்களுடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு பிள்ளை செல்வம் கிட்டும்.

மகரம் :
இவ்வருடம் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சில தடைகள் உண்டாகலாம். வேறு நபர்களுடன் இணையும் நிலை ஏற்படலாம். தற்போதைய காதல் பிரிந்தாலும், வேறு நபருடன் நிலையான உறவு உண்டாகலாம். இந்த வருடமே திருமணம் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு

கும்பம் :
நிலையான சூழல் என்றில்லாமல், பல துணிச்சலான காரியங்கள் நடக்கலாம். திருமணம் ஆனவர்கள் துணையை கட்டாயப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க வைப்பது நல்லது. துணை மீதான அக்கறை கூடுதாலாக இருக்க வேண்டும்

மீனம் :
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் காதலுக்கு சிறப்பாக அமையும். இலகுவாக உணர்வீர்கள். முதலில் நீங்கள் பேச தயங்க கூடாது. சரியான தொடர்பு இல்லாமல் போனால் காதல் அமைவது கடினமாகலாம். எதற்கும் அவசரப்படாமல் அமைதியாக இருங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like