தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக கலையரசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்கு அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சிக்கு இம்முறை ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த இரண்டு நாள்கள் பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டம் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில் அந்த மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் பிந்திக்கிடைத்த செய்திகளின் படி பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக குறிப்பிட்ட கடிதத்தை, தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பாமல் தாமதிக்கும்படி கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, கலையரசனை தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கும் முடிவை தற்காலிகமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.