பிரபல கவர்ச்சி நடிகை மும்தாஜ் இறந்து விட்டாரா?

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மும்தாஜ் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக கலக்கியவர் மும்தாஜ். தற்போது 70 வயதாகும் அவர் தனது குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மும்தாஜ் இறந்துவிட்டதாக சமூகவலைதளத்தில் செய்தி தீயாக பரவியது.

ஆனால் மும்தாஜ் நலமுடன் இருப்பதாக அவரின் இளைய மகள் தன்யா மத்வானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்யா கூறுகையில், என் அம்மா குறித்து பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை, அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்பதை ரசிகர்களுக்கு கூறி கொள்கிறேன்.

அதனால் மும்தாஜ் உடல்நலம் குறித்து வெளியாகும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like