மேலதிக வகுப்புக்கு சென்ற 08 மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தெஹியத்தகண்டி- அரலகங்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 08 பேரும் மாணவிகள் என காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலதிக வகுப்புக்கு சென்ற குறித்த மாணவிகள் மீது கெப்ரக வாகனம் ஒன்று மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்…..