திருகோணமலையில் 138 வாக்குகளால் தப்பியது சம்பந்தன் ஆசனம்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் அரசுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 39,570 ஆகும். இதில் 138 வாக்குகள் குறைந்திருந்தால் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் சம்பந்தன் தோற்றிருப்பார்…!

திருகோணமலையில் 53 தமிழ் அரசுக் கிளைகளை நிறுவி கட்சியைக் கட்டுக் கோப்பாக குகதாசன் வைத்திருந்ததன் காரணமாகவே இந்தளவு வாக்குகள் விழுந்திருக்கிறது.

எல்லாத் தேர்தல் மாவட்டத்திலும் த.தே.கூ இன் வாக்கு வங்கி சரி பாதிக்கு சரிந்த போது திருகோணமலையில் மாத்திரம் பெரிய சரிவு ஏற்படவில்லை.

2015 இல் த.அ.க விழுந்த வாக்குகள் 45,894 ஆகும். இம்முறை திருகோணமலையில் போட்டியிட்டு தோற்ற தமிழ்க் கட்சிகள் எடுத்த வாக்குகள் 15,734 ஆகும்.

ஈ.பி.டி.பி – 4,908, தமிழ்க் காங்கிரஸ் 4,117 , தமிழ்மக்கள் கூட்டணி 6,709 வாக்குகள். தலைக்கு வந்தது தலைப்பாவோடு போய்விட்டது.