முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து, அவரை பிரதமராக நியமிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதற்கான வழியை ஏற்படுத்தி கொள்வார்கள் என எதிர்வு கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் களுத்துறையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்சசியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை தேர்தலில் வாக்கு எண்ணும் போது பல பிரச்சினைகள் ஏற்பட்டன எனவும், ஒரு நாள் இரவு முழுவதும் வாக்கு பெட்டிகளை வைத்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.