இன்று (12) பதவிப்பிரமாணம் செய்யவுள்ள அமைச்சரவைக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பிக்கள் 03 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்ரிபால சிறிசேன, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகிய எம்பிக்கள் இவ்வாறு உள்ளடங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 எம்பிக்கள் மொட்டில் வெற்றிப்பெற்றதுடன் சுரேன் ராகவன் தேசிய பட்டியலின் மூலம் பாராளுமன்றம் செல்லவுள்ளார்.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ் மாவட்டத்தில் தனியாக ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது. இதற்கமைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலசுக எம்பிக்கள் 15 பேர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் தயசிறி ஜயசேகராவுக்கு அமைச்சரவை பதவி கிடைக்காத நிலையில் அவர் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும்.