தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்களை ( சிம் அட்டையில் இயங்கும் உபகரணங்கள்) தொலைபேசி இணைப்புகளுக்கு தொடர்புபடுவதற்கான நடவடிக்கை விரைவில் இடைநீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள சிம் அட்டையுடன் இணைப்பிலுள்ள உபகரணங்களுக்கு இந்த தடை ஏற்படாதென தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையினுள் தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் வர்த்தக அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
தொலைத்தொடர்பு சட்டத்திற்கமைய இது சட்டத்தை மீறும் செயல் எனவும் இது தண்டனை வழங்கும் குற்றமாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.