வவுனியாவில் விபத்து- தாயும் மகளும் படுகாயம்!

மரக்கறிகள் ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் தாயும் மகளும் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் நடந்துள்ளது.

கந்தசாமி கோவில் வீதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள், சூசைப்பிள்ளையார்குளம் வீதி வழியாகச் சென்ற மரக்கறிகள் ஏற்றிய கன்ரர் ரக வாகனத்துடன் மோதுண்டது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகளும் படுகாயமடைந்தனர்.அவர்கள் வவுனியா பொது மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.