காதலியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்ற காதலன் காரியம்!!

அம்பாலாந்தோட்டை பகுதியில் காதலியின் தங்க மாலையை அபகரித்துக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 22 ஆம் திகதி ரியதிகம பகுதியில் வைத்து காதலன் மற்றும் காதலியான இருவரும் சந்தித்துள்ளனர்.
உரையாடிக்கொண்டிருந்த நிலையில் தனது காதலியை புஹுல்யாய பகுதியிலுள்ள பாலடைந்த வீடொன்றிற்கு காதலன் அழைத்துச்சென்றுள்ளார்.காதலியிடம் முறைக்கேடாக நடந்துக்கொள்ள காதலன் முயற்சித்த வேளையில், காதலியான குறித்த யுவதி அந்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் காதலி அணிந்திருந்த தங்க மாலையை காதலன் அறுத்து எடுக்கொண்டதுடன், மீண்டும் அம்பாலாந்தோட்டை நகரிற்கு அழைந்து வந்து சற்று காத்திருக்குமாறு தெரிவித்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
தங்கமாலையை பறிகொடுத்த நிலையில், வீடு திரும்பிய காதலி தனது தந்தையிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.இதன்போது தந்தை குறித்த விடயம் தொடர்பில் காவல் துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் முச்சக்கர வண்டி சாரதியின் உதவியுடன் குறித்த நபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
கைது செய்த இளைஞரை சோதனைக்குட்படுத்தியபோது, குறித்த யுவதியிடமிருந்து பலவந்தமாக எடுத்துச் சென்ற தங்க மாலையை அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றில் அடகு வைத்தமைக்கான பற்று சீட்டினை கைப்பற்றியுள்ளனர்.
20 ஆயிரம் ரூபாவிற்கு அடகு வைத்துள்ளதாகவும், அவர் மது பாவனைக்கு அடிமையானவர் எனவும் காவல் துறையினர் விசாரணைகளின் வாயிலாக கண்டறித்துள்ளனர்.யுவதியை ஏமாற்றியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞர், காவல் துறையினரின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவரை நீதிமன்றில் முன்னிலை படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Get real time updates directly on you device, subscribe now.

You might also like