மீண்டும் ஆரம்பித்த முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடி: வீடுகளிற்கு படையெடுக்கும் இராணுவம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்துள்ளனர்.

கீரிமலை பகுதியின் J/226, J/225 ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.

அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.