தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு குறித்து தான் எந்த வகையிலும் மகிழ்ச்சியடையவில்லை என காணி முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் காணி அமைச்சில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை நேற்று பொறுபேற்றுக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
வழங்கப்பட்டுள்ள அமைச்சு தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்ற போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த பதவியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்ததுடன் அவரது முன்னிலையில் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தை வெளியிட்டிருந்தார்.