இன்று முதல் தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டு; நான்கு நாள்களுக்கு நடைமுறைக்கு

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்துவிட்டதால் நாட்டில் மாலை வேளையில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, வலய ரீதியாக, மாலை 6-7 மணி, இரவு 7-8 மணி, இரவு 8-9 மணி மற்றும் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இந்த நடைமுறை இன்று ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.