மொனராகலையில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் பையில் இருந்து ஒரு கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
வெலிஓயவில் இருந்து தனமல்வில வரை பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு அருகில் பையை சோதனையிட்ட போது கஞ்சா பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹராம பேரலிஹெல குடாகம்மான பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு பேருந்துக்குள் திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.